மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் சாவு

நெல்லை அருகே மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-04-06 22:11 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கொங்கந்தான்பாறை பகுதியை சேர்ந்தவர் ராஜ செல்வகுமார் (வயது 55). இவர் அந்த பகுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ராஜ செல்வகுமார் வீட்டில் இருந்த மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டதில் அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்