வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

அருப்புக்கோட்டை அருேக வீட்டின்பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.

Update: 2022-04-06 22:06 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி போஸ்டல் காலனி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 53). இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு திருநகரத்தில் உள்ள உறவினர் துக்க நிகழ்வுக்காக சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த  4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பொன்னுசாமி, டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்