கஞ்சா செடி வளர்த்தவர் கைது
வத்திராயிருப்பு அருகே கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). இவர் தாணிப்பாறை பகுதியில் மாரியப்பன் என்பவரது வாழைத்தோப்பில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் தோப்பின் உரிமையாளருக்கு தெரியாமல் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வத்திராயிருப்பு போலீசார் வாழைத்தோப்பில் சோதனை செய்தபோது 160 செ.மீ. அளவுள்ள கஞ்சா செடியை கண்டறிந்தனர். பின்னர் அந்த செடியினை பறிமுதல் செய்து கருப்பையாவை கைது செய்தனர்.