பீரோவில் இருந்த 23 பவுன் நகை மாயம்

சாத்தூரில் பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள் மாயமானது.

Update: 2022-04-06 21:55 GMT
சாத்தூர், 
சாத்தூர் நகர் காமாட்சியார் தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 42). இவர் தனது குடும்பத்தினருடன், உறவினர் திருமணத்திற்கு சென்றார். பின்னர் வந்து 23 பவுன் நகைகளை பீரோவில் பூட்டி வைத்துவிட்டு சாவியை எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்தார். மறுநாள் பீரோவை திறக்க முயன்ற போது சாவி வைத்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மற்றொரு சாவி மூலம் பீரோவை திறந்து பார்த்த போது பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விக்னேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்