நாய் கடித்து பெண் சாவு
ராஜபாளையம் அருகே நாய் கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளம் சக்திநகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். பூ வியாபாரி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது50). இவரை நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே மாரியம்மாள் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.