விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Update: 2022-04-06 21:37 GMT
குலசேகரம்:
குலசேகரம் அருகே திருநந்திக்கரை இடவக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். தொழிலாளியான இவருடைய மனைவி சரஸ்வதி. தேவதாசுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதனால் வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் வீட்டில் தேவதாஸ் விஷம் குடித்த நிலையில் படுக்கையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அவருடைய மனைவி சரஸ்வதி அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்