களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது

களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்படுகிறது.

Update: 2022-04-06 21:35 GMT
களக்காடு:
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிப்பதற்காக தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் களக்காடு பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. 

இதன் காரணமாக தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. தடுப்பணையில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் விழுகிறது. குளிப்பதற்கு ஏதுவான வகையில் தண்ணீர் வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தே காணப்படுகிறது. மழை பெய்தால் மட்டுமே மீண்டும் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்