ஒலி மாசு விஷயத்தில் கோர்ட்டு தீர்ப்பை யாரும் எதிர்க்கக்கூடாது; சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி
ஒலி மாசு விஷயத்தில் கோர்ட்டு தீர்ப்பை யாரும் எதிர்க்கக்கூடாது என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
பெங்களூரு:
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தும் விஷயத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பை நாங்கள் ஆதரிக்கிறோம். அதில் எந்தெந்த பகுதியில் எவ்வளவு ஒலியை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான் மசூதிகளுக்கு எதிராகவோ அல்லது கோவில்களுக்கு ஆதரவாகவோ இல்லை. ஒலி மாசு விஷயத்தில் கோர்ட்டின் தீர்ப்பையும், சுற்றுச்சூழலையும் மதிக்கிறேன். கோர்ட்டு தீர்ப்பை யாரும் எதிர்க்கக்கூடாது.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.