‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:
ெதாற்றுநோய் பரவும் அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதிய அளவு கழிவுநீா் கால்வாய் இல்லாத காரணத்தால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடாகி ெதாற்றுேநாய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கூடுதல் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகூர், கீழக்கரை.
விபத்தை ஏற்படுத்தும் சாலை
மதுரை மாநகர் கோட்ஸ் மேம்பாலத்தின் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இதனை அறியாமல் வாகன ஓட்டிகள் வேகமாக ெசல்வதால் விபத்துகளும் நடைபெறுகிறது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மனோகரன், மதுரை.
பொது கழிவறை வேண்டும்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ரைட்டன்பட்டி கிராமத்தில் ெபாது கழிவறை இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் சாலையோரத்தில் இயற்கை உபாதைகளை கழிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் இப்பகுதி ெபண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் இப்பகுதியில் ெபாது கழிவறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து, ஸ்ரீவில்லிபுத்தூர்.
குடிநீர் தட்டுப்பாடு
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 39-வது வார்டு எம்.ஜி.ஆர். ெதருவில் சில நாட்களாக தண்ணீர் முறையாக வரவில்ைல. தற்போது கோடைக்காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபாகரன், மதுரை.
தெருநாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தாபுரம் மேட்டுத்தெரு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் நபர்களையும் வாகன ஓட்டிகளையும் துரத்துவதால் சிறு,சிறு விபத்துகளும் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு பொிதும் அச்சப்படுகின்றனா். பொதுமக்களை பயமுறுத்தும் ெதருநாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவி, பரமக்குடி.
குடிநீா்குழாய் வேண்டும்
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆத்தங்குடி பள்ளிவாசல் தெரு பகுதியில் குடிநீர் குழாய் வசதி இல்லாத காரணத்தால் மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ெபாதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் குடிநீர் குழாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரவிந்த்சாமி, சிவகங்கை.
பஸ் வசதி
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி-கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவிதா, ஆலங்குளம்.