களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது.

Update: 2022-04-06 20:45 GMT
களக்காடு:
களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி வரதராஜபெருமாள் வீதிஉலா வந்தார். விழா நாட்களில் தினசரி பகலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவில் 2 கருட வாகனங்களில் பெருமாளும், வெங்கடாஜலபதியும் உலா வருகின்றனர். 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண விழாவும், 13-ந் தேதி இரவில் பெருமாள் குதிரை வாகனத்தில் வீதிஉலாவும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 15-ந் தேதி மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 16-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்