வில்வவனேசுவரர் கோவில் குடமுழுக்கு
கபிஸ்தலம் அருகே திருவைக்காவூர் வில்வவனேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே திருவைக்காவூர் வில்வவனேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வில்வவனேசுவரர் கோவில்
கபிஸ்தலம் அருகே உள்ள திருவைக்காவூரில் பிரசித்தி பெற்ற வில்வவனேசுவரர் கோவில் உள்ளது. மும்மூர்த்தி தலமாக போற்றப்படும் இந்த கோவில் மகாசிவராத்திரி தலமாக விளங்குகிறது.
இந்த கோவில் குடமுழுக்கு நேற்று காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி காலை கிராம தேவதை பிரார்த்தனை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்பஅலங்காரம், யாக சாலை பிரவேசம், யாக பூஜை தொடக்கமும் நடைபெற்றது.
தொடர்ந்து 1-ம் கால யாகபூஜை பிரசாதம் வழங்குதலும், 5-ந் தேதி காலை சக்தி கணபதி பூஜை, சூரிய பூஜை, துவார பூஜை, யாக பூஜைகள், திரவிய ஹோமம், தீபாராதனை, 2-ம் கால யாக பூஜையும், மாலை வீர கணபதி பூஜை, ஹோம பூஜை, விசேஷ சந்தி, பூர்ணாஹூதி, தீபாராதனை, 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.
குடமுழுக்கு
நேற்று காலை லட்சுமி கணபதி பூஜை, 4-ம் கால யாக பூஜையும், 8 மணிக்கு மேல் கடங்கள் புறப்பாடும், 9.30 மணிக்கு விமானங்களுக்கு குடமுழுக்கும், 9.45 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகளுக்கு குடமுழுக்கும் மாலை 4 மணிக்கு மூலவர் மகா அபிஷேகமும், 5.30 மணிக்கு திருக்கல்யாணமும் சுவாமி திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது. குடமுழுக்கில் பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதிகண்ணதாசன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ரமேஷ்பாபு, பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், ஊராட்சி தலைவர் பவுனம்மாள், ஒன்றிய கவுன்சிலர் விஜயன், கோவில் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.