நம்மாழ்வார் படத்திற்கு மரியாதை செலுத்திய மாணவர்கள்
நம்மாழ்வார் படத்திற்கு மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.;
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, இயற்கை வேளாண்மை தொடர்பான நம்மாழ்வார் ஆற்றிய சேவைகளை பற்றியும், வேப்ப மரத்திற்கான காப்புரிமைக்காக ஜெனீவா நீதிமன்றம் வரை சென்று வாதிட்டு இந்தியாவுக்கு புகழ் சேர்த்தது குறித்தும் பள்ளி மாணவர்களிடம் எடுத்து கூறப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நம்மாழ்வார் உருவப்படத்திற்கு முன்பு நின்று வணங்கி மரியாதை செலுத்தினர்.