ஆடுதுறை விஸ்வநாத சாமி கோவில் குடமுழுக்கு

ஆடுதுறை விஸ்வநாத சாமி கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து காண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-04-06 20:22 GMT
திருவிடைமருதூர், ஏப்.7-
ஆடுதுறை விஸ்வநாத சாமி கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து காண்டு சாமி தரிசனம் செய்தனர். 
குடமுழுக்கு
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை வீரசோழன் ஆற்றுப்பாலம் அருகில் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணி வேலைகள் பல லட்ச ரூபாய் செலவில் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. விழாவையொட்டி யாகசாலை பூஜை  நடைபெற்றது.  இதில் கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான நிறுவனர் விட்டல் தாஸ் மஹராஜ் சுவாமிகள் கலந்துகொண்டார். 
நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் சூரியனார்கோயில் ஆதீனம் மகாலிங்கசாமி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருமூலர் ஆதின மடம் சீனிவாசன் சாமிகள் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். காலை 10 மணிக்கு நாதஸ்வர மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டது. 10.30 மணிக்கு அனைத்து விமான குடமுழுக்கு நடைபெற்றது. 
விழா ஏற்பாடுகள்
10.45 மணிக்கு மூலவர் குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.வி.கே. அசோக்குமார், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், துணைத்தலைவர் கமலாசேகர், ஒப்பந்தக்காரர் ஏ.வி.கே. பிரிதிவிராஜன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் எம். பி. ராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலதண்டாயுதம், குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் நிர்மலா தேவி தக்கார் அருணா மற்றும் உபயதாரர் ஏ.வி.கே. குடும்பத்தினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்