வைகை எக்ஸ்பிரஸ் வருகிற 13-ந் தேதி செங்கல்பட்டில் இருந்து புறப்படும்

தண்டவாள பராமரிப்பு பணி காரணத்தால் வைகை எக்ஸ்பிரஸ் வருகிற 13-ந் தேதி செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-04-06 20:14 GMT
மதுரை,

சென்னை- விழுப்புரம் ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காரைக்குடியில் இருந்து வருகிற 13-ந் தேதி சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12606) செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும். அதேபோல, அன்றைய தினம், சென்னையில் இருந்து மதுரை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12635) சென்னையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும். இதற்கிடையே, 13-ந் தேதி மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னையில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியன வழக்கம் போல இயக்கப்படும்.

மேலும் செய்திகள்