வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி, ஏப்.7-
திருச்சி கோப்பு மேலத்தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 26). திருட்டு, வழிப்பறி வழக்கில் தொடர்புடைய இவர் ஜீயபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டள்ளார். இந்தநிலையில் இவர் ஜாமீனில் வெளியே வந்தால் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவார் என்று தெரியவந்ததால், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாவட்ட கலெக்டருக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் பிரவீன் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று உத்தரவிட்டார்.