தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-06 19:31 GMT
தெருநாய்கள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கேசராபட்டியில் இருந்து வளையப்பட்டி, பொன்னமராவதி பஸ் நிறுத்தம் வரை ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க வருவதினால் அவர்கள் பயத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் சிறுவர்- சிறுமிகள், பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வளையப்பட்டி, புதுக்கோட்டை.

ஆபத்தான மின்கம்பம் 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி திருவள்ளுவர் தெருவில் சாலையோரத்தில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பத்தின் மூலம் அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள மின் சாதனப் பொருட்களும் பழுதடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவள்ளுவர் நகர், புதுக்கோட்டை.

குப்பைகளால் நோய் பரவும் அபாயம் 
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் தார் சாலை ஓரத்தில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாக்கு தட்டுகழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டிக்கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த குப்பைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், முத்தனூர், கரூர். 

மின் விளக்கு அமைக்கப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, வெட்டிவயல் பஞ்சாயத்துக்கு உட்பட்டது குமரப்பன்வயல் கிராமம். குமரப்பன்வயல் பஸ் நிறுத்தம் அருகில் இருக்கும் மின் கம்பத்தில் மின்விளக்கு இல்லை. இதனால் அப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து உள்ளதால் இரவு நேரத்தில் அந்த வழியாக சிறுவர், சிறுமிகள், பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், குமரப்பன்வயல், புதுக்கோட்டை. 

பாதுகாப்பற்ற கிணறு 
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளத்திவிடுதி  ஊராட்சி ஆலங்குடி-கொத்தமங்கலம் செல்லும் சாலையோரத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றின் அருகே  அரசு உயர்நிலைப்பள்ளி  உள்ளது.  இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு சல்லடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பள்ளத்திவிடுதி, புதுக்கோட்டை. 

கொசுத்தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை கொசுக்களின் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூக்கம் இன்றி பெரிதும் அவதிப்படுவதுடன் கொசு தொல்லையால் டெங்கு மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் மாலை நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பொன்னமராவதி, புதுக்கோட்டை.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? 
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, நவல்பட்டு கிராமத்தில்  அரசு புறம்போக்கு நிலமான நவலி  குளத்திற்கு சொந்தமான இடத்திலுள்ள மயானத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 2013-ம் ஆண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது. தற்போது ஆக்கிரமிப்பாளர்  நவலி குளத்துக்கு சொந்தமான இடத்தை  பலர் உதவியுடன் மறுபடியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நவல்பட்டு, திருச்சி. 

ஆபத்தான மின்கம்பங்கள்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்திம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி தங்கநகரில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து உள்ளன. இந்த மின்கம்பங்கள் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் வீட்டில் வைத்துள்ள மின்சாதன பொருட்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தங்கநகர்,  திருச்சி. 

மூடப்படாத பள்ளம் 
திருச்சி மாவட்டம், கள்ளக்குடி பேரூராட்சி, திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மால்வாய் ரோடு பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளம் கடந்த 15 நாட்கள் ஆகியும் மூடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கல்லக்குடி, திருச்சி.

சாக்கடை பாலத்தின் நடுவே பள்ளம்
திருச்சி காமராஜபுரம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள மளிகை கடை எதிரே மெயின் சாலையில் இருந்து பிரியும் சாக்கடை கால்வாய் பாலத்தின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.  இதனால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாலத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தைவிட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அந்த பாலத்தை சீரமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காமராஜபுரம், திருச்சி.

குப்பை தொட்டி வைக்கப்படுமா? 
திருச்சி பொன்னகர் 3-வது வீதி பிரதான சாலையின் ஓரத்தில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவை அவ்வப்போது அகற்றப்பட்டாலும் குப்பைகள் கொட்டப்படும்போது அவற்றை கால்நடைகள் உண்பதுடன், தெருநாய்கள்  சிதற விடுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க  வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பொன்னகர், திருச்சி.

நாய்கள் தொல்லை
திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதியில் சிறுவர்-சிறுமிகள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெரு நாய்கள் துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரிய மிளகுபாறை, திருச்சி.

மேலும் செய்திகள்