வெவ்வேறு விபத்துகளில் சாலைப்பணியாளர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் சாலைப்பணியாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
துறையூர்துறையூர் அருகே உள்ள நாகலாபுரம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55). சாலைப்பணியாளரான இவர் நேற்று முன்தினம் மொபட்டில் வயலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். துறையூர் - பெரம்பலூர் சாலையை கடந்து செல்வதற்காக வாகனங்கள் ஏதேனும் வருகிறதா? என நின்று கவனித்து கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த விக்னேஷ் (28) அவர் மீது மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பொன்னுசாமி துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்பார்வையாளர் பலி
இதேபோல் திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சுரேஷ் (35). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சோப்பு கம்பெனியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
சென்னைக்கு மனைவி மற்றும் தாயுடன் சென்றிருந்த அவர் வேனில் மீண்டும் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். வேனை சுரேஷ் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலையில் வேன் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ளகொணலை என்ற இடம் அருகே வந்த போது, திடீரென்று சாலையோரத்தில் இருந்த தடுப்பு கட்டையில்மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தாய், மனைவி, டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுகாயம்
திருச்சி புத்தூர் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜெனோவா (40). இவர் நேற்று திருச்சி தென்னூர் பட்டாபிராமன் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜெனோவா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.