தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து

செங்கம் நகரில் தடுப்புச்சுவரில் லாரி மோதியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2022-04-06 18:47 GMT
செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் நேற்று காலை பழைய பஸ் நிலையம் அருகே சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் சேதமடைந்து லாரியில் இருந்த ஆயில் சாலையில் வழிந்தோடியது. இந்த விபத்தினால் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை அகற்றி சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்