தொட்டியில் தண்ணீர் குடித்த 2 மாடுகள் செத்தன
தொட்டியில் தண்ணீர் குடித்த 2 மாடுகள் செத்தன
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 43). இவர் 2 காளை மாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று தொழுவத்தில் உள்ள தொட்டியில் இருந்த தண்ணீரை 2 மாடுகளும் குடித்தன. அதனை குடித்த சில நிமிடங்களிலேயே அந்த 2 மாடுகளும் அடுத்தடுத்து துடிதுடித்து செத்தன. இதைபார்த்த தாமோதரன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து தொட்டியில் இருந்த தண்ணீரில் யாரேனும் விஷத்தை கலந்தார்களா என்பதை கண்டறிய அதனை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால் மாடுகள் செத்தனவா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.