திருச்செங்கோட்டில் சைபர் கிரைம் விழிப்புணர்வு ஊர்வலம்-போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
திருச்செங்கோட்டில் சைபர் கிரைம் விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
எலச்சிபாளையம்:
நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில் திருச்செங்கோட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் கலந்து கொண்டவர்கள் சைபர் கிரைம் குறித்தும், அதனால் பணத்தை இழந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பதாகைகளை கைகளில் ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், திருச்செங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.