விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் காப்பீட்டு தொகை-சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்
விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் காப்பீட்டு தொகை-சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்
நாமக்கல்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்மைலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). இவர் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி நடந்த சாலை விபத்தில் சதீஷ்குமார் உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் காப்பீட்டு தொகை வந்தது. இதற்கான காசோலையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.