புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வனப்பகுதியில் ஏராளமான மயில்கள் காணப்படுகின்றன. இவை இரைகளை தேடி வனப்பகுதியில் சுற்றி திரிவதோடு கலெக்டர் அலுவலக வளாகத்தின் பிரதான சாலைக்கும் வருவது உண்டு. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் தானியங்கள் உள்ளிட்ட இரைகளை மயில்களுக்கு ஈடுவது உண்டு. இதனை மயில்கள் ஓடி வந்து உண்பது வழக்கம். அதுபோல நேற்று மாலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரைகளை தேடி அலைந்த மயில்கள் சாலையில் போடப்பட்டிருந்த தானியங்களை மயில்கள் உண்ணும் போது எடுத்த படம். மயில்கள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படமால் உள்ளதை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.