பிளஸ்-2 மாணவியை கடத்திய 4 பேர் கைது
பிளஸ்-2 மாணவியை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் மாணவியை சிலர் காரில் கடத்தி சென்றதாக கூறி அவருடைய தந்தை மற்றும் கிராமத்தினர் அந்த காரை மடக்கி பிடித்தனர். மேலும் காரில் வந்தவர்களை பிடித்து முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி வழக்குப்பதிவு செய்து கீழ மதுரை ெரயில்வே ஸ்டேஷனை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ் (வயது 22), முத்துராஜ் மகன் பிரபு (22), பால்ராஜ் மகன் மணிபாரதி(22), பிச்சைமுத்து மகன் அஜித் குமார் (22) ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.