விபத்தில் டிரைவர் சாவு

விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2022-04-06 17:44 GMT
கமுதி, 
கமுதி அருகே பேரையூரை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 45). இவர் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று இவர் முதுகுளத்தூரில் இருந்து பேரையூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். எட்டிசேரி வளைவு சாலையில் வந்தபோது கட்டுப்பாட்ைட இழந்த மோட்டார்சைக்கிளில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சரவணகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்