நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும்-விவசாயிகள்

இருள்நீக்கி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-04-06 18:45 GMT
கோட்டூர்:-

இருள்நீக்கி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்க நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நேரடி நெல் கொள்முதல் நிலையம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையம் மண் தரையை அடித்தளமாக கொண்டு கீற்றுக் கொட்டகையில் செயல்பட்டு வருகிறது. 
சபாபதிபுரம், சிராங்குடி, சோத்திரியம், இருள்நீக்கி, நெருஞ்சினக்குடி, சின்ன குருவாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லை, இங்கு உள்ள கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகிறார்கள். 
குறுவை மற்றும் சம்பா சாகுபடி காலங்களில் 35 ஆயிரம் மூட்டைகள் வரை இந்த கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இங்கு மண் தரையில் தான் அடுக்கி வைக்கப்படுகிறது. 

நெல் மணிகள் வீண்

இங்கு மழைக்காலங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க முடியாமல் நெல் மணிகள் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு உள்ள கொட்டகையில் பாதுகாப்பு வசதியும் இல்லை என விவசாயிகள் கூறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருள்நீக்கி கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்