கருவேப்பிலைபாளையம் வேம்பையனார் கோவில் கும்பாபிஷேகம்

கருவேப்பிலைபாளையம் வேம்பையனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2022-04-06 17:35 GMT
திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் வேம்பையனார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 

நேற்று காலையில் யாகசாலையில் இருந்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்