நெல், பருத்தி பயிரில் மகசூல் குறைந்ததால் விஷம் குடித்து பெண் தற்கொலை
நெல், பருத்தி பயிரில் மகசூல் குறைந்ததால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கொரடாச்சேரி:-
நெல், பருத்தி பயிரில் மகசூல் குறைந்ததால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கொரடாச்சேரி அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நெல், பருத்தி சாகுபடி
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள பெருமாளகரம் செட்டிசிமிழி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி வாசுகி(வயது 54). இவர், தனக்கு சொந்தமான வயலில் நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்திருந்தார். இந்த 2 பயிரிலும் மகசூல் குறைந்ததால் வாசுகி மன வேதனை அடைந்தார்.
இந்த நிலையில் இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வாசுகியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நெல், பருத்தி சாகுபடியில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்ட மனவேதனையில் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.