பா.ஜ.க. 42-வது ஆண்டு விழா கொண்டாட்டம்

பா.ஜ.க. 42-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது

Update: 2022-04-06 17:15 GMT
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் பா.ஜ.க.வின் 42-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவையொட்டி கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில்  நகர பா.ஜ.க. அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவிற்கு நகர தலைவர் மோடி கண்ணன் தலைமை தாங்கினார். வக்கீல் பிரிவு மாநில தலைவர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஓ.பி.சி. அணியின் மாநில துணைத்தலைவர் பெரோஸ்காந்தி கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பேசினார். அதனைத்தொடர்ந்து கட்சியினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் பா.ஜ.க. அலுவலகத்தில் பிரதமர் நரேந்திரமோடியின் நேரடி உரையை காணொலி காட்சி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில்  நோயாளிகளுக்கு ரொட்டி, பழங்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஸ்ரீதர், சந்தோஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் முட்டம் செந்தில், பாலு, இளைஞர் அணி மாவட்ட தலைவர் பாரதி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், இளைஞர் அணி நகர தலைவர் ராஜகோபால் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்