ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா. கொடியேற்றத்துடன் தொடங்கியது

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-04-06 17:13 GMT
வேலூர்

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜலகண்டேஸ்வரர் கோவில்

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41-வது ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 4-ந் தேதி கிராம தேவதை செல்லியம்மன் உற்சவமும், நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடந்தது.
அதைத்தொடர்ந்து  பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. கலவை சச்சிதானந்தா சாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர். சாமி வீதி உலா, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கோட்டை வளாகத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

63 நாயன்மார்கள்

வெயில் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தரைவிரிப்புகள் கோவில் வளாகத்தில் விரிக்கப்பட்டுள்ளன. கொடியேற்றத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
7, 8, 9, 10் ஆகிய தேதிகளில் காலையில் விநாயகர், சந்திரசேகரர் புறப்பாடும், மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 11-ந் தேதி 63 நாயன்மார்கள் உற்சவமும், 12-ந்தேதி காலையில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும் நடக்கிறது. 13-ந்தேதி பிச்சாண்டவர் உற்சவம், மாலையில் குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 

மேலும் செய்திகள்