ஏரியூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ஏரியூரில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2022-04-06 17:13 GMT
ஏரியூர்:
ஏரியூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், ஏரியூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனபால் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்