நல்லம்பள்ளி அருகே விவசாய நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

நல்லம்பள்ளி அருகே விவசாய நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-06 17:13 GMT
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள வடக்குதெரு கொட்டாவூர் கிராமத்தில் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி பெட்ரோலிய குழாய் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியில் வருவாய்த்துறை, போலீசார், உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு ெதரிவித்து பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய் அமைப்பதை கைவிட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் குழாய் பதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து தாசில்தார் வினோதா, தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் மற்றும் அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து குழாய் பதிக்கும் பணி நிறுத்தி விட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்