நல்லம்பள்ளி அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

நல்லம்பள்ளி அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2022-04-06 17:12 GMT
நல்லம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரியை சேர்ந்தவர் தாமஸ் (வயது41). தொழிலாளி. இவர் தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவில் ராட்டினம் அமைத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் ஊருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். தடங்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை கடந்தபோது மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் தாமஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்