தர்மபுரி அருகே அரசு நிலத்தில் மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் டிரைவர்கள் 3 பேர் மீது வழக்கு

தர்மபுரி அருகே அரசு நிலத்தில் மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவர்கள் 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-04-06 17:12 GMT
தர்மபுரி,:
தர்மபுரி டவுன் போலீசார் நாகசேனஅள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் அரசுக்கு சொந்தமான நிலத்தில் மண் அள்ளி லாரி மற்றும் டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அரசு அனுமதியின்றி மண்ணை எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரம், லாரி, டிராக்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர்கள் மணிகண்டன் (வயது 35), மாதேஷ் (32), பூமணி (24) ஆகிய 3 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்