போச்சம்பள்ளியில் புதிய வழித்தடத்தில் அரசு பஸ்கள் நீட்டிப்பு

போச்சம்பள்ளியில் புதிய வழித்தடத்தில் நீடிப்பு செய்த அரசு பஸ்களை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;

Update: 2022-04-06 17:12 GMT
மத்தூர்:
தர்மபுரியில் இருந்து நாகரசம்பட்டிக்கு பெரியாம்பட்டி, காரிமங்கலம் வழியாக அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை தர்மபுரியில் இருந்து பெரியாம்பட்டி, காரிமங்கலம், நாகரசம்பட்டி வழியாக வேலம்பட்டி வரை வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல ஊத்தங்கரையில் இருந்து போச்சம்பள்ளி, காரிமங்கலம் வழியாக பாலக்கோடு வரை இயக்கப்படும் அரசு பஸ், தற்போது ஊத்தங்கரையில் இருந்து போக்கம்பட்டி, அரசமரம், போச்சம்பள்ளி, காரிமங்கலம் வழியாக பாலக்கோடு வரையில் தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் நடந்தது. இதில் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் அரசு பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் டேம் வெங்கடேசன் உள்பட கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்