ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ரூ 11 லட்சம் உண்டியல் காணிக்கை
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ரூ.11 லட்சம் உண்டியல் காணிக்கை இருந்தது.
ஓசூர்:
ஓசூரில் உள்ள சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. விழாவின்போது, பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தினர். இதையடுத்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன் மற்றும் ஆய்வாளர்கள் பிரபு, நாசிம்மமூர்த்தி, பூவரசன் ஆகியோர் முன்னிலையில், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 7 உண்டியல்களிலும் மொத்தம் ரூ.11 லட்சத்து 2,278 இருப்பது தெரியவந்தது.