ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-06 17:11 GMT
புதுக்கோட்டை:
சொத்து வரி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் சாந்தநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நேற்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆா்ப்பாட்டம் நடத்தியதாக விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க. வினர் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்