மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி சாவு

மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-04-06 17:08 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் மணிசேகர் (வயது 45). இவர் அதே பகுதியில் கல் பட்டறையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பணியின் போது சுவிட்ச் பாக்சை மணிசேகர் தொட்டபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்