ரூ.50 லட்சத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டும் பணி
கம்பம் நகராட்சி 1-வது வார்டு பகுதியில் ரூ.50 லட்சத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
கம்பம்:
கம்பம் நகராட்சி 1-வது வார்டு சுவாமி விவேகானந்தர் தெருவில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் சுந்தரி வீரபாண்டியன், சர்புதீன், இளம்பரிதி, குருகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் 7-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இதில் தி.மு.க. கம்பம் நகர பொறுப்பாளர் (வடக்கு) வக்கீல் துரைநெப்போலியன், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் வீரபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.