ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

Update: 2022-04-06 16:39 GMT
திருவெண்காடு
திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயருக்கு திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு, முதல் கால யாக பூஜையும், மகா பூர்ணாஹூதியும் நடந்தது. நேற்று காலை 2-ம் கால யாக பூஜையும், மகா பூர்ணாஹூதியும் நடந்தது. இதனையடுத்து பட்டாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து சென்று கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடத்தி வைத்தனர். இதனையடுத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கவசம் அணிவிக்கப்பட்டது. இதில் கோவில் தர்ம கர்த்தாக்கள் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


மேலும் செய்திகள்