கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்

கம்பத்தில் நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-04-06 16:34 GMT
கம்பம்: 


கம்பம் வடக்கு வட்டம் ராஜகுல அகமுடையார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா 2 நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதனை தொடர்ந்து 2-வது நாள் பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றில் கரைத்தனர். விழா ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள், இளைஞர் அணியினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

 

மேலும் செய்திகள்