தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-06 16:22 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை பணி தொடங்குமா?
திண்டுக்கல் பேகம்பூர் கே.ஏ.ஆர்.நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பின்னர் திடீரென அது நிறுத்தப்பட்டது. இதனால் கரடுமுரடான சாலையில் மக்கள் நடந்து செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் சறுக்கி விழுந்து விடுகின்றனர். அதேபோல் சாக்கடை கால்வாய் வசதி முழுமையாக இல்லாததால், கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்குவதோடு, சாக்கடை கால்வாயை முழுமையாக கட்டி தரவேண்டும்.
-முகமதுநவ்பல், பேகம்பூர்.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
திண்டுக்கல் அரசு கால்நடை பெருமருத்துவமனை முன்புள்ள சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் அங்குள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கால்நடை பெருமருத்துவனைக்கு செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக்கேடு உருவாகும் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, திண்டுக்கல்.
குப்பை குவியல்
தேனியில் அரசு மாணவர் விடுதி மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு இடையே உள்ள காலிஇடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, குப்பைகளை கொட்டாமல் தடுக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காமாட்சி, தேனி.
குண்டும், குழியுமான சாலை
பழனி அருகே தும்மலபட்டியில் இருந்து மரிச்சிலம்புக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. சாலை முழுவதும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலை சீரமைக்க வேண்டும்.
-அறிவாசான், மானூர்.
நகர்சுற்று பஸ் வசதி
திண்டுக்கல்லில் நகர்சுற்று பஸ் வசதி இல்லை. இதனால் வெளியூர் மக்கள் மட்டுமின்றி நகரவாசிகளும் ஆட்டோக்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே பஸ்நிலையம், ரவுண்டு ரோடு, ரெயில் நிலையம், மார்க்கெட், முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நகர்சுற்று பஸ் இயக்க வேண்டும். இதன்மூலம் மக்கள் பயன்பெறுவதோடு, அரசுக்கும் வருவாய் கிடைக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கண்ணன், திண்டுக்கல்.

மேலும் செய்திகள்