ஆழியாறில் மொபட் திருட்டு

ஆழியாறில் மொபட் திருட்டு போனது.

Update: 2022-04-06 15:46 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி அருகில் சர்பத் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடைக்கு அருகில் நிறுத்தி இருந்த அவரது மொபட் திடீரென்று காணாமல் போனது தெரியவந்தது. 

இதுகுறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் சோதனைச்சாவடியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். 

அதில் ஒருவர் காவி நிற வேட்டி அணிந்த ஒருவர் மொபட்டை திருடிக் கொண்டு வால்பாறை நோக்கி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்