தச்சுத்தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

வடமதுரையில் தச்சுத்தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடுபோனது.;

Update:2022-04-06 21:00 IST
வடமதுரை:
வடமதுரை அகத்தியர் நகரை சேர்ந்தவர் செல்வம் (46). தச்சுத்தொழிலாளியான இவர், கரூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதிக்கு கவுசல்யா என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி வெளியூர் சென்று விட்டார். இதனால் கவுசல்யா, வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இரவில் தூங்க சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை வீட்டின் உரிமையாளர் ரமேஷ் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செல்வம், ஈஸ்வரி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஈஸ்வரி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5¾ பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே நகை வைத்திருந்த கைப்பை மற்றும் அதில் இருந்த ரசீதுகளை அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர் முத்துக்குமார் விரைந்து வந்து, வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்