விழிப்புணர்வு வாசகங்களுடன் ஓவியங்கள்

விழிப்புணர்வு வாசகங்களுடன் ஓவியங்கள்

Update: 2022-04-06 15:28 GMT
உடுமலை
உடுமலை எலையமுத்தூர் சாலையில்போக்குவரத்துத்துறையின், வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு ஓட்டுனர் உரிமம்பெறுதல், வாகனப்பதிவு, பதிவை புதுப்பித்தல் உள்ளிட்ட போக்குவரத்து குறித்த பல்வேறு பணிகளுக்காக தினசரி நூற்றுக்கணக்கான ஓட்டுனர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருகிறவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்துதெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த அலுவலகத்திற்கு வருகிறவர்கள் மற்றும் இந்த சாலை வழியாக செல்கிறவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில்அலுவலகத்தின் முன்பு சுற்றுச்சுவரில், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு அதற்கான ஓவியங்கள் வரையப்பட்டுவருகின்றன. அதில் ஒரு ஓவியத்தில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்வதை பார்த்த போலீஸ்காரர், அந்த வாகனத்தை நிறுத்துகிறார். அங்கு ‘இருசக்கர வாகனம் இருவருக்கு மட்டுமே’என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. கார்களில் செல்கின்ற“அனைவரும் சீட்பெல்ட் அணிந்து பாதுகாப்பை உறுதி செய்வோம்”, “சிவப்பு விளக்கை தாண்டாதீர் மீறினால் அபராதம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்”, “சரக்கு வாகனத்தில் அதிகசுமை ஏற்றினால் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்”, “சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்”, “போதிய இடைவெளியில் வாகனத்தை இயக்கவும்”, “பாதுகாப்பாய் வாகனத்தை இயக்குவோம் பாதசாரிகளுக்கு வழி கொடுப்போம்”, “சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு”நேரமாக கிளம்புவீர், மெதுவாக செல்வீர், பாதுகாப்பாய் சென்றடைவீர் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு, அதற்கான ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. இந்த பணிகள் உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்