நிர்மலா சீதாராமனுடன் பசவராஜ் பொம்மை சந்திப்பு; பத்ரா மேலணையை தேசிய திட்டமாக அறிவிக்க கோரிக்கை

டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க ஒப்புதல் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2022-04-06 15:20 GMT
பெங்களூரு:

பத்ரா மேலணை திட்டம்

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். முதல் நாளில் ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு கேட்டு கொண்டார். இந்த நிலையில் பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்ட அறிவிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு நிதித்துறையின் அனுமதி வழங்குமாறு நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். இதை தேசிய திட்டமாக அறிவிக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. மின்சாரத்துறையில் 3 திட்டங்கள் பசுமை வழியில் சேர்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறேன். இதை பரிசீலிப்பதாக மின்சாரத்துறை மந்திரி கூறியுள்ளார்.

சிறப்பு கூட்டம்

  மத்திய அரசின் திட்டங்கள், வங்கிகள் வழியாக ஆக வேண்டிய விஷயங்கள் குறித்து ஒரு சிறப்பு கூட்டம் நடத்தப்படும். சர்வதேச சிறுதானிய தினம் வருவதையொட்டி ராய்ச்சூரில் சிறுதானிய விவசாயிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்திக்க உள்ளேன்.

  பிரதமர் அனைவருக்கும் ஒவ்வொரு பணியை ஒதுக்கியுள்ளார். மாநிலங்களில் 75 ஏரி-குளங்களை மேம்படுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். பா.ஜனதா கட்சியின் நிறுவன நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அதில் நானும் கலந்து கொண்டேன்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்