ஆணழகன் பட்டம் வென்ற கல்லூரி மாணவருக்கு பாராட்டு

திண்டுக்கல்லில் நடந்த ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2022-04-06 15:03 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் மாவட்ட உடற்பயிற்சி நிலைய உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மகாலில் நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 180 பேர் பங்கேற்றனர். வயது அடிப்படையில் 8 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
இதில் திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் சிபின்ராய் வெற்றிபெற்று ‘மிஸ்டர் திண்டுக்கல் ஆணழகன்-2022’ பட்டத்தை தட்டிச்சென்றார்.
இதனையடுத்து ஆணழகன் பட்டம் பெற்ற சிபின்ராய்க்கு பொன்னாடை அணிவித்தும், பரிசுகள் வழங்கியும் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்