விளாத்திகுளத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
விளாத்திகுளத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுப்பழக்கம்
விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் மகன் ராஜமூர்த்தி (வயது 27) இவர் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு கறிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்
ராஜ மூர்த்திக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
தூக்கு போட்டு தற்கொலை
நேற்று காலையிலும் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபோது, அவரை தாய் சுப்புத்தாய் கண்டித்துள்ளார். மேலும், மது குடிப்பதை விட்டு விட்டு வேலைக்கு செல்லுமாறு கண்டிப்புடன் கூறினாராம். இதனால் மனமுைடந்து காணப்பட்ட அவர் நேற்று மதியம் வீட்டில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து விளாத்திகுளம் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்