வீடு, மளிகை கடைகளில் பணம், பொருட்கள் திருட்டு

நாகை பகுதிகளில் வீடு, மளிகை கடைகளில் வீடு மற்றும் மளிகை கடைகளில் பணம், பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-04-06 12:59 GMT
நாகப்பட்டினம்:
நாகை பகுதிகளில் வீடு, மளிகை கடைகளில் வீடு மற்றும் மளிகை கடைகளில்  பணம், பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருட்டு
நாகை வெளிப்பாளையம் சிவன் கீழ வீதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது   மனைவி மாரியம்மன். இவர் தனது குடும்பத்துடன் நேற்றுமுன்தினம் இரவு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து மாரியம்மன் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மளிகை பொருட்கள் திருட்டு 
நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வலிங்கம். இவர் பாரதி மார்க்கெட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பொட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம், மளிகை பொருட்களை ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசில் விஸ்வலிங்கம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். 
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதேபோல் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள பாரதி மார்க்கெட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு ரவி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசில் ரவி புகார் ெகாடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
----

மேலும் செய்திகள்