மாடு முட்டியதில் தபால்காரர் சாவு
வேதாரண்யத்தில் மாடி முட்டியதில் தபால்காரர் பரிதாபமாக இறந்தார்.;
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் மாடி முட்டியதில் தபால்காரர் பரிதாபமாக இறந்தார்.
தபால்காரர்
நாகை மாவட்டம், வேதாரண்யம் நகரில் வசித்து வருபவர் மாறன் (வயது52). இவர் வேதாரண்யம் அருகே உள்ள நெய்விளக்கு கிராமத்தில் தபால்காரராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சந்திரா.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர் தனது வீட்டில் ஆடு, மாடு, எருமை, காளை உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
மாடு முட்டி சாவு
நேற்றுமுன்தினம் இவர் தனது காளையை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிந்த போது எதிர்பாராதவிதமாக அந்த காளை மாறனை முட்டியது.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாறன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விசாரணை
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்- இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடு முட்டியதில் தபால்காரர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.