என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
நாக்பூரில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாக்பூர்,
நாக்பூர், மணீர் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கிஷோர் கத்னே(வயது25). என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டில் இருந்து சம்பவத்தன்று துர்நாற்றம் வீசியுள்ளது.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்போல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்த அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உள்ளே கிஷோர் கத்னே தூக்கில் பிணமாக தொக்கிய நிலையில் கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவரவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர். உயிரிழந்த கிஷோர் கத்னேவின் பெற்றோர் ஆசிரியர்கள் ஆவார். அவர்கள் பண்டாரா மாவட்டத்தில் லகானி நகரில் வசித்து வருகின்றனர்.